மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

விதிமீறல் காரணமாக மூன்று தேர்தல் பார்வையாளர்களை பணியில் இருந்து நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நீக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மூன்று தேர்தல் பார்வையாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பணியில் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் மூன்று பேரை தவறான நடத்தை மற்றும் விதிமீறல் காரணமாக பணியிலிருந்து நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

சத்தீஸ்கரின் தண்டேவாரா தொகுதியில் தேர்தல் பார்வையாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி லால்தீன்குமா ப்ராங்க்ளினை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அனுராக் படேல் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சியோனி மால்வா மற்றும் ஹோசங்காபாத் தொகுதியில் பொறுப்பில் இருந்த உதய நாராயண் தாஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஸ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் லங்லே மாவட்டத்தில் தேர்தல் செலவுப் பார்வையாளராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி கௌரவ் அவஸ்தி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தவறான நடத்தைகள் மற்றும் விதிமீறல் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 7-ஆம் நிறைவடைந்தது. அதே நாளன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேச வாக்குப்பதிவும் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com