நடிகர் கங்கா(வயது 63) திடீர் மாரடைப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கங்கா.
அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், லட்சுமி வந்தாச்சு, அம்மா பிள்ளை, தங்கமான ராசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதனையடுத்து சின்னத்திரை தொடர்களை இயக்கியும், நடித்தும் வந்தார்.
இந்நிலையில், மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நடிகர் கங்கா, நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையும் படிக்க: ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி
அவரது உடல் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்காவின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரத்திற்கு அருகே உள்ள பரதூருக்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

தொழில் ஒழுங்கோடு... கிசு கிசு வராமல்... ரசிகைக்கு விஜய் அளித்த பதில்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



