பசுஞ்சாணத்தால் உருவாக்கப்பட்ட 3 லட்சம் தீப விளக்குகள்!

பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி 3 லட்சம் தீப விளக்குகளை உருவாக்கியுள்ளது ராஜஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு.
தீப விளக்குகள் (கோப்புப் படம்)
தீப விளக்குகள் (கோப்புப் படம்)

ஜெய்ப்பூர்: ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண பலராம பசு சேவை அறக்கட்டளை, பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தி 3 லட்சம் தீப விளக்குகளை உருவாக்கியுள்ளது.

ராஜஸ்தான் ஹிங்கோனியா கோசாலைகளில் இருந்து பசுங்சாணம் வரவைக்கைப்பட்டுள்ளது. அரசால் நெறிமுறைப்படுத்தப்பட்ட இந்த கோசாலையில் 13 ஆயிரம் மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசும்போது, “நாங்கள் பசுஞ்சாணத்தில் இருந்து 3 லட்சம் விளக்குகளைத் தயாரித்துள்ளோம். தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பசு பாதுகாப்புக்கான செய்தியை இது முன்னெடுத்து செல்லும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

மாவு, மரத்தூள் மற்றும் பசை இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கென ஹைட்ராலிக் இயந்திரங்கள் பயன்படுத்தி விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த விளக்குகள் இயக்கத்தில் பின்தொடர்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை சந்தையில் உரிய விலையில் விற்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com