அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

நெதர்லாந்துக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

News image
Updated On :12 நவம்பர் 2023, 8:23 pm

DIN

நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.

இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இதுபோல் அரையிறுதியிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.