ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு!

ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு!

ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம்.
Published on

சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம், இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழு நிதியுதவியுடன் கூடிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நிதியுதவியை பொருத்தளவில், 89 இடங்களில் உள்ள 766 ரஷ்ய பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவம், இயற்பியல், அணுசக்தி மற்றும் ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் சேரும் மாணவர்கள் பல்வேறு வகையிலான உதவிகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.education-in-russia.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

உதவித்தொகையுடன் ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான தகவல்களை சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து அந்த நாடுகளில் படித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து இந்த நாடுகளில் உயர்கல்வி படிக்கச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com