சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கேரளத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து! ரயில் சேவை பாதிப்பு!!

ரயில் தடம் புரண்ட பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

News image
Updated On :15 நவம்பர் 2023, 3:54 pm

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு இன்று இரவு (நவ. 15) விபத்துக்குள்ளானது. 

ரயில் தடம் புரண்ட பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நிலாம்பூர் சாலை - ஷோரனூர் விரைவு ரயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.

பாலக்காடு ரயில்வே பிரிவு அளித்த தகவலின்படி, ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் குறித்து தகவலை இன்னும் வெளியிடவில்லை.

விரைவு ரயில் தடம் புரண்டதால் அத வழித்தடத்தில் வரக்கூடிய ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்று ரயில்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.