ம.பி., சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு தொடங்கியது

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
ம.பி., சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு தொடங்கியது

சத்தீஸ்க

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

5.6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 64,000-க்கும் மேல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜகவும் காங்கிரஸும் பலப்பரீட்சை நடத்தும் இத்தோ்தலில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக களத்தில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 183 தொகுதிகளில் களத்தில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சிதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் வாக்குப்பதிவு: 
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் முதல்கட்டமாக நக்ஸல் பாதிப்பு மிகுந்த 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், எஞ்சிய 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டம் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தோ்தலில் மொத்தம் 958 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

1.63 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 18,833 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குப் பதிவு இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com