சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மாலை 5 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் 71.16% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 67.34% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 
சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மாலை 5 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் 71.16% வாக்குகளும், சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 67.34% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று(நவ. 17) வாக்குப்பதிவு நடைபெற்றது அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மாலை 5 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்டத் தேர்தலில் 67.34 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 71.16% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. ம.பி.யில் அதிகபட்சமாக அகர்வால்வாவில் 82 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் குருட் தொகுதியில் 82.60 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தலில் மிசோரம் மாநிலத்திற்கு கடந்த நவ. 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானுக்கு நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவுக்கு நவ. 30 ஆம் தேதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com