ராஜஸ்தானை அறிவியல் பூர்வமாக கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: அஸ்ஸாம் முதல்வர் தாக்கு!

ராஜஸ்தானை அறிவியல்பூர்வமாக காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து வருவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானை அறிவியல் பூர்வமாக கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: அஸ்ஸாம் முதல்வர் தாக்கு!

ராஜஸ்தானை அறிவியல்பூர்வமாக காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து வருவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவ.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வருவதால் ராஜஸ்தான் மாநில தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இதையொட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை ராஜஸ்தானின் பிரதாப்கர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது: “ராஜஸ்தானில் பெட்ரோல் முதல் மின்சாரம் வரையில் காங்கிரஸ் அறிவியல்பூர்வமாக கொள்ளையடித்து வருகிறது. நாம் அஸ்ஸாமையும், ராஜஸ்தானையும் ஒப்பிடுவோம். 

அஸ்ஸாமில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97 முதல் ரூ.98 வரை உள்ளது. ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94 முதல் ரூ.95 வரை விற்கப்படுகிறது. ஆனால் ராஜஸ்தானில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. 

பிரியங்கா காந்தி இங்கு வந்து அவர்கள் ஏழை மக்களுடன் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் நீங்கள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், ராஜஸ்தான் மக்கள் மற்ற மாநில மக்களை விட அதிகமான மின்கட்டணம் செலுத்தி வருகிறீர்கள் என்பது தெரியவரும். வடகிழக்கு மாநிலங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்படித்தான் காங்கிரஸ் அரசு அறிவியல் பூர்வமாக ராஜஸ்தான் மக்களைக் கொள்ளையடித்து வருகிறது.” என்று தெரிவித்தார். 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com