பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையொட்டி ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தின் வீர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
'பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது. பாஜக தனது நண்பர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. காங்கிரஸோ ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காகப் பாடுபடுகிறது.
ஏழைகளுக்கு நாங்கள் ஏதாவது செய்தால் அதை இலவசங்கள் என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் பணக்காரர்களின் ரூ. 15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
ஆயுதப் படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிவீர் திட்டம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இது சரிசெய்யப்படும்' என்றார்.
இதையும் படிக்க | நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

