ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதி லட்டு தயாரிப்பு வேலைக்கு ஆட்கள் தேவை! ஒரே ஒரு தகுதி!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

News image
திருமலை ஏழுமலையானின் லட்டு பிரசாதம்.
Updated On :23 நவம்பர் 2023, 11:07 am

DIN


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

பொதுவாக வேலை வாய்ப்புச் செய்திகளைப் பார்த்தால் யாருக்கும் ஆச்சரியம் ஏற்படுவதில்லை. ஆனால், திருமலை திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆள்கள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவே அது மிகப்பெரிய செய்தியாகவும் காரணமாகியிருக்கிறது.

சிலருக்கு இந்த வேலை வாய்ப்புச் செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அதாவது, ஊதியம், தகுதி உள்ளிட்ட விவரங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பதி லட்டு தயாரிக்கும் கூடத்தில் பணியாற்ற ஆள்கள் தேவை என்ற விளம்பரத்தில்,  முதல் நிபந்தனையாக, பழக்க, வழக்கம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஒரு நபராக இருக்க வேண்டும்.

இரண்டாவது, ஆகம விதிப்படி கோயில்களுக்கு பிரசாதம் தயாரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

மூன்றாவது நிபந்தனையாக, வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்டு தயாரிக்கும் பணிக்கு விண்ணப்பித்து பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.