பிரதமருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?: தேர்தல் ஆணையத்துக்கு மணீஷ் திவாரி கேள்வி

தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?: தேர்தல் ஆணையத்துக்கு மணீஷ் திவாரி கேள்வி

தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை (நவ.25) தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பிரதமர் குறித்து தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று காங்கிரஸ் மக்களவை எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மணீஷ் திவாரி பேசியதாவது: “தேர்தல் ஆணையம் ஒருசார்பாக நடந்துகொள்கிறது. நான் இதனை மிகுந்த வருத்தத்துடன் கூறுகிறேன். பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் அதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் முன்னெடுப்பதில்லை. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நீட்டிப்பதாக கூறி தேர்தல் விதிகளை மீறினார் பிரதமர் மோடி.

ஆனால் தேர்தல் ஆணையம் மோடிக்கு எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை. அவரிடம் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. மத்திய அரசின் அமைப்புகளால் எதிர்க்கட்சியினர் மட்டுமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com