‘தெலங்கானாவுக்கு கேசிஆர் என்ன செய்தார்?’: ராகுல் காந்தி

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிற ராகுல் காந்தி அம்மாநில முதல்வரை விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேட்பதற்கு முன்னர், தெலங்கானாவுக்கு சந்திரசேகர் ராவ் என்ன செய்தார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடப்பது ஊழல் ஆட்சியென்றும் எல்லாவிதமான அரசு திட்டங்களும் ராவின் குடும்பத்தினருக்குச் செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆறு வாக்குறுதிகளை ஆட்சி அமைத்த முதல் பேரவைக் கூட்டத்திலேயே அக்கட்சி நிறைவேற்றும் என வலியுறுத்தி பேசியுள்ளார்.

ராகுல் காந்து பேசியபோது, “இன்று நிலப்பிரபுத்துவ அரசுக்கும் மக்கள் அரசுக்கும் தெலங்கானாவில் போட்டி நடக்கிறது. உங்கள் முதலமைச்சர் காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேட்கிறார், இங்குக் கேள்வி கேசிஆர் என்ன செய்தார் என்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியைத் தோற்கடிப்பதும் மத்தியில் பாஜகவைத் தோற்கடிப்பதும்தாம் தங்களின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் வளர்தெடுத்த ஹைதராபாத் தகவல் தொழில்நுட்ப மண்டலத்தைப் பயன்படுத்தி கேசிஆர் நாள்தோறும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து பணம் சம்பாதித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com