மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிஎஸ்கேவில் நான் கற்றுக்கொண்டது அதிகம்: டுவைன் பிரிடோரியஸ் உருக்கம்! 

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிடோரியஸ் சிஎஸ்கே அணியில் இருந்து விலகியுள்ளார். 

News image

படம் : டுவைன் பிரிடோரியஸ் | இன்ஸ்டாகிராம்

Updated On :26 நவம்பர் 2023, 2:57 pm IST

34 வயது பிரிடோரியஸ் 2016 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்டுகள், 27 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய (பாகிஸ்தானுக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்) வீரராகவும் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 164 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் என்கிற பெயரைப் பெற்றிருந்தார். 

டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2023இல் ஓய்வு பெறுவதாக பிரிடோரியஸ் அறிவித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரிடோரியஸ் இடம்பெற்றிருந்தார். ஆல்ரவுண்டரான இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் சிஎஸ்கே அணி இவரை அணியில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி சிஎஸ்கே. இது ஒரு காவியம். சிஎஸ்கேவில் இருந்தபோது உடனிருந்த பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி. இது ஒரு அற்புதமான அனுபவம். நான் நிறைய கற்றுக் கொண்டேன். 2024 சீசனுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

டி10 தொடரில் அபுதாபி அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளடு குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.