தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு புகழாரம்! 

முன்னாள் இந்திய  வீரரும் சிஎஸ்கே வீரருமான அம்பத்தி ராயுடு தோனியின் முடிவெடுக்கும் திறன் குறித்து வியந்து கூறியுள்ளார். 
தோனியின் முடிவுகள் 99.9% சரியாக இருக்கும்: அம்பத்தி ராயுடு புகழாரம்! 

2013இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர் அம்பத்தி ராயுடு. 55 போட்டிகளில் விளையாடிய அவர் 47 சராசரியுடன் விளையாடியுள்ளார். சுழல் பந்து, வேகப் பந்து என அனைத்தையும் அதிரடியாக ஆடும் திறமைசாலியான பேட்டர். 

2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வான ராயுடு, 16 ஆட்டங்களில் 802 ரன்கள் எடுத்து பிறகு இந்திய அணிக்கும் தேர்வானார். நூலிழையில் 2019 உலகக் கோப்பை அணியில் நம்.4 இடத்திற்கு இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரும் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த நேரத்தில் 3டி கண்ணாடி என ராயுடு கிண்டலாக பதிவிட்ட ட்வீட் வைரலாகியது. 

தற்போது யூடியூப் நேர்காணல் ஒன்றில் அம்பத்தி ராயுடு, “வீரர்களிடம் இருந்து சிறந்தவற்றை வாங்குவதில் தோனி சிறப்பானவர். சிஎஸ்கேவுக்காக விளையாடிய பல வெளிநாட்டு வீரர்களிடம் இருந்தும் சிறந்தவற்றை வெளிகொணர்ந்திருக்கிறார். இந்தத் திறமை அவருக்கு தானாக கிடைத்ததா அல்லது இவ்வளவு ஆண்டுகளாக விளையாடியதால் வந்ததா எனத் தெரியவில்லை. 

பல நேரங்களில் அவர் இதை ஏன் செய்தார் என நினைப்பேன். ஆனால் பின்னர்தான் அவர் முடிவு சரியானதாக இருந்தது எனத் தெரியும். 99.9 சதவிகிதம் அவர் சரியாக இருந்திருக்கிறார். அதனால்தான் அவரால் இவ்வளவு ஆண்டுகள் வெற்றிகரமாக இருக்க முடிந்தது. இந்திய கிரிக்கெட்டில் எவரும் அவரது முடிவினை கேள்விக் கேட்க முடியாது” எனக் கூறியுள்ளார். 

ஐபிஎல் 2023இல் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com