மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாகும் ஹார்திக் பாண்டியா: டி வில்லியர்ஸ் கணிப்பு!

வரும் ஐபிஎல் போட்டியில் ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு விளையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாகும் ஹார்திக் பாண்டியா: டி வில்லியர்ஸ் கணிப்பு!

இன்றோடு ஐபிஎல் அணிகள் தங்களுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். கடந்த சில நாள்களாக ஹார்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ரூ.15 கோடி விலைக்கு மீண்டும் மும்பை அணிக்கு வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருப்பினும் இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் பிரபல தென்னாப்பிரிக்க வீரரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், “ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அநேகமாக அவர்தான் அடுத்த கேப்டன் பதவியை வகிப்பார். ஏனெனில் ரோஹித்துக்கு இந்திய அணியையும் இதையும் வழி நடத்துவது கூடுதல் அழுத்ததை தரலாம். அதனால் இந்த முடிவு எடுக்கப்படுமென நினைக்கிறேன். இப்படித்தான் எனக்கும் தகவல் கிடைத்துள்ளது” எனக் கூறியுள்ளார். 

ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது, 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ள மும்பை அணி கடந்த சில வருடங்களாக தடுமாறி வருகிறது. ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட் அணியில் இல்லாததே முக்கிய காரணம்.

ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் சேர்ந்தால் அந்த அணி நிச்சயமாக பலம் வாய்ந்த அணியாக மாறுமென கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com