ஒடிசா மாநிலம், ஹரிப்பூர் கிராமத்தில் இரண்டு பேர் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தங்கள் வீட்டு வாசலில் இருந்த நிரஞ்சன் தாஸ் (27) மற்றும் சீனிவாச தாஸ் (24) ஆகிய இருவர் மீதும் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். விசாரணையில் இரண்டு தரப்பினருக்கு இடையேயான பலநாள் பகையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு நபர்கள் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்திவருவதாகக் காவல் கண்காணிப்புப் பொருப்பாளர் ஜெகநாத் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அஸ்ஸாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவு
இந்தத் தேடுதல் பணியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கிராமப்பகுதியில் தொடர் தாக்குதல் சம்பவங்களைத் தவிர்க்க காவலர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


