தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன: பிரியங்கா குற்றச்சாட்டு

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 
தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன: பிரியங்கா குற்றச்சாட்டு

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், போங்கீர் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியது, 

ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து ஆட்சியை நடத்துவார்கள், நிலம், மது, மாஃபியா ஆகிய அனைத்தும் மாநிலத்தில் கொடிக்கட்டி பறக்கும் அதேசமயம் வேலைவாய்ப்பு இருக்காது என்றார். 

காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சி அறிவித்த வாக்குறுதிகளையும் அவர் பட்டியலிட்டார். 

தெலங்கானாவின் ஏழைகள் ஏழைகளாவே உள்ளனர். ஆனால் பிஆர்எஸ் கட்சி மேலும் பணக்காரர்களாகி வருகிறது. பாஜகவாக இருந்தாலும் சரி, பிஆர்எஸ் கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்துகொண்டு பணக்காரர்களாக மாறுவதே அவர்களின் கொள்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா மக்கள் விற்பனைக்கு இல்லை என்பதை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தெலங்கானா மக்களின் "கனவுகள்" தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், காலேஸ்வரம் பாசனத் திட்டம் உள்பட எந்தத் திட்டமும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு கட்டத்திலும் ஊழல் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com