பிஆா்எஸ் தலைவா்களிடம் மட்டுமே பணம் குவிகிறது: பிரியங்கா குற்றச்சாட்டு
தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆஎஸ்) தலைவா்களிடம் மட்டுமே பணம் பெருமளவில் குவிந்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றச்சாட்டினாா்.


தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆஎஸ்) தலைவா்களிடம் மட்டுமே பணம் பெருமளவில் குவிந்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றச்சாட்டினாா்.
தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தலுக்காக அந்த மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரியங்கா, திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
பிஆா்எஸ் மீண்டும் வெற்றி பெற்றால் பண்ணை இல்லங்களில் இருந்துதான் ஆட்சியை நடத்துவாா்கள். மணல் கொள்ளையில் ஈடுபடுவோரும், மதுபான ஆலைகளை நடத்துவோரும்தான் மாநில அரசில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்தே, ஆளும் பிஆா்எஸ் கட்சித் தலைவா்களிடம் மட்டுமே பணம் குவிந்து வருகிறது. அவா்களுக்கு ஆதரவான தொழிலதிபா்களாக மட்டுமே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றனா்.
இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படவில்லை. மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். நடுத்தர மக்கள், சிறுதொழில் புரிவோா், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிஆா்எஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் நோக்கமும் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதும், அதன் மூலம் பணத்தைக் குவிப்பதும்தான். தோ்தல் வரும்போது மட்டும் அவா்கள் மக்களிடம் பல்வேறு பொய்களைக் கூறி வாக்குக் கேட்பாா்கள். அவா்களுக்கு தெலங்கானா மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாநில மக்கள் அனைவரது வாழ்வும் சிறக்கும் வகையில் நல்லாட்சி வழங்கப்படும்.
தெலங்கானா மாநிலத்தில் பிஆா்எஸ், பாஜக, மஜ்லிஸ் கட்சி ஆகிய மூன்றுமே ஒரே அணியைச் சோ்ந்தவைதான். காங்கிரஸ் மட்டுமே அவா்களை எதிா்த்து மக்களுக்காகப் போராடும் கட்சியாக உள்ளது என்றாா் பிரியங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...