மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அழுத்தம்தான் காரணமா?
ராஜஸ்தான் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 20 வயது மாணவர் திங்கள்கிழமை (நவ.27) தற்கொலை செய்துள்ளார்.
மேற்கு வங்கம், பிர்ஹாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாரீத் ஹுசைன் ஒரு வருடத்திற்கு மேலாக கோட்டா நகரில் தங்கி படித்து வருகிறார்.
அவர் பயிற்சி பெறுகிற தனியார் கோச்சிங் நிறுவனத்தில் உடன் படிக்கிற மாணவர்களுடன் கடந்த ஜூலை முதல் வாப் நகரில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார்.
திங்கள்கிழமை பிற்பகல்தான் கடைசியாக அவரை நண்பர்கள் பார்த்துள்ளனர்.
இரவு 8 மணி வரை அறையில் இருந்து வெளியே வராததைக் கண்டு வீட்டின் உரிமையாளர் மூலமாகக் காவலர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.
அங்கு விரைந்த காவல் துறையினர் அறை கதவை உடைத்து உள்நுழைந்தபோது மாணவர் தூக்கு மாட்டி இறந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், காரணம் என்னவாக இருக்குமென விசாரித்து வருவதாக அப்பகுதி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை இந்தாண்டில் மட்டும் இது 25-வது முறை.
கடந்த மாதம் செப்.18 அன்று நீட் தேர்வு பயிற்சி பெற்றுவந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பெண், கோட்டா நகரில் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிக்க: ஒடிஸா: வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
நாடு முழுவதுமிருந்து தகுதித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களின் தேர்வாக கோட்டா நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.