

பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை-புணே சென்ற சுற்றுலா ரயிலான பாரத் கௌரவ் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவருக்கும் புணே நிலையத்தில் நேற்று மாலை சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு நச்சுத்தன்மைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ரயில்வே அமைச்சக வட்டாரங்களின்படி, ஒரு தனியார் நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது. அந்நிறுவனத்திற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தன.
மேலும் ஆய்வுக்காக உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.