ரூ.1 கோடி பரிசு வென்ற சிறுவன்... எப்படி?

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர், ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார்.
ரூ.1 கோடி பரிசு வென்ற சிறுவன்... எப்படி?


அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கவுன் பனேகா கோர்பதி’ (உங்களில் யார் கோடீஸ்வரர்) நிகழ்ச்சியில், 14 வயது ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒரு கோடி ரூபாய் பரிசாக வென்றுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொதுஅறிவு சார்ந்த விளையாட்டுப் போட்டியான இந்த நிகழ்ச்சியின் ஜுனியர்ஸ் சிறப்பு வாரத்தில் கலந்து கோண்ட மயங்க் என்கிற மாணவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஹரியாணா மஹேந்திரகர் பகுதியைச் சேர்ந்த மயங்க், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் சிறப்பான பதில்களை ஒவ்வொரு கேள்விக்கும் அளித்து விளையாடினார். 

 ‘புதிதாகக் கண்டறியப்பட்ட கண்டமான அமெரிக்காவை முதன்முதலில் உலக வரைபடத்தில் வரைந்த ஐரோப்பிய வரைகலைஞர் யார்?’ என்கிற கேள்வி ஒரு கோடி ரூபாய் பரிசுக்கான கேள்வியாகக் கேட்கப்பட்டது.

மார்டின் வால்ட்சீமுல்லர் என்கிற சரியான பதிலைக் கூறி மயங்க் அந்தப் பரிசை வென்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏழு கோடி வரை பரிசாக வெல்லும் வாய்ப்புண்டு. ஆனால், அடுத்த கேள்வியை எதிர்க்கொண்ட மயங்க், அதற்கு முந்தைய பரிசுத் தொகையுடன் வெளியேறினார்.

இது குறித்து மயங்க், “மிக இளவயதில் போட்டியாளராகப் பங்கேற்ற நான் இந்தப் பரிசை வென்றது எனக்கும் குடும்பத்தினருக்கும் மிகவும் பெருமிதம் வாய்ந்த தருணமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் அமிதாப் பச்சன் சாருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் நாங்கள். நன்றாக விளையாட தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்த என் குடும்பத்தாருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் மயங்க்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், சிறுவனின் தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com