தேர்தல் பரப்புரையில் காங். டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதா?

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக பிஆர்எஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ்  வாக்குப் பதிவின்போது...
பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் வாக்குப் பதிவின்போது...

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக, பிஆர்எஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

தெலங்கனா மாநில காங்கிரஸ் கமிட்டி, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விடியோ மற்றும் ஆடியோக்களை உருவாக்கி பரப்பியதற்கு நம்பகத்தன்மையுடைய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பிஆர்எஸ் தலைவர்கள் சந்திரசேகர் ராவ், ராமா ராவ், அமைச்சர் ஹரிஸ் ராவ் மற்றும் எம்எல்சி கவிதா ஆகியோரை உண்மைக்கு மாறாகச் சித்தரிக்க காங்கிரஸ் முயன்றதாகவும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவையெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரின் மகளும் எம்எல்சியுமான கே கவிதா, எக்ஸ் தளத்தில், “அன்புக்குரிய வாக்காளர்களே, விழிப்புடன் இருங்கள். நம்பிக்கையற்ற கட்சிகள் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள். உங்களது முடிவை பொய்யான செய்திகள் மாற்ற அனுமதிக்காதீர்கள். ஒன்றை நம்புவதற்கும் பகிர்வதற்கும் முன்பு அதன் உண்மைத்தன்மையை சோதியுங்கள். நமது ஜனநாயகம் விருப்பத் தேர்வுகளாலேயே நீடிக்கிறது, பொய்யான தகவல்களால் அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானா உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் டிச. 3 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com