தெலங்கானா முதல்வரின் மகள் மீது காங்கிரஸ் புகார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகா் ராவின் மகளும் மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா.
முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகா் ராவின் மகளும் மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

மொத்தமாக 119 தொகுதிகளில் 2,290 வாக்காளா்கள் போட்டியிடுகின்றனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 

இந்நிலையில், தெலங்கானா முதல்வர் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடக்கும் இன்று பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள டிஏவி பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த கவிதா, அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரித்ததாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com