திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு

திருமலை திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை மீட்டுள்ளனர்.
திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு


திருமலை: திருமலை திருப்பதியில், சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை மீட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுவிட்டு பேருந்துநிலையத்தில் காத்திருந்தபோது கடத்தப்பட்ட குழந்தை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீனா மற்றும் குழந்தை அருள்முருகனுடன் திருப்பதி சென்றிருந்தார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு, சென்னை திரும்ப திருப்பதி பேருந்த நிலையத்துக்கு வந்த போது குழந்தை கடத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் பேருந்துநிலையத்தில் மூவரும் தூங்கிக் கொணடிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்த காவல்துறையினர், 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து சுதாகர் என்பவரிடமிருந்து குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com