கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2023, 4:24 am

DIN

ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. 

இதனிடையே சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றுவரும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.  

ஹாங்சோவ் நகரில் செப். 23 -ஆம் தேதி முதல் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

14 -ஆவது நாளான சனிக்கிழமை, இந்தியா மகளிர் கபடியில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 100 ஆவது பதக்கத்தை பெற்றது இந்தியா. 

பதக்கம் விவரம்: 
 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4 -ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. 

வில்வித்தையில் தங்கம், வெள்ளி:
ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஓஜாஸ் டியோடாலே 149 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார், மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

மகளிர் வில்வித்தையில் தங்கம்
மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தென் கொரியா வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் ஜோதி சுரேகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.