கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

23.3.1976: கார்களின் விலை கணிசமாகக் குறைப்பு - அம்பாசிடர் - ரூ. 32,170!

கார்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது பற்றி...

News image

23.3.1976

Updated On :22 மார்ச் 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது டில்லி, மார்ச். 22 - கார் தயாரிப்பாளர்கள் புது கார்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.

டில்லியில் கார்களின் புது விலை வருமாறு: அம்பாசிடர் - ரூ. 32170; பியட் காரின் பிரீமியர் பத்மினி மாடல் - ரூ. 32,904; ஸ்டாண்டர்ட் காஸல் - ரூ. 25945.

இந்த விலையில் எக்ஸைஸ் தீர்வை மத்திய, மாநில விற்பனை வரிகள், விற்பனையாளர் கமிஷன், பதிவுக் கட்டணம் இன்ஜுரன்ஸ் கட்டணம் முதலியவை அடங்கும்.

டில்லியில் அம்பாசிடர் விலை ரூ. 36331 ஆகவும் பிரீமியர் பத்மினி கார் விலை ரூ. 36941 ஆகவும், ஸ்டாண்டர்ட் காஸல் கார் விலை ரூ. 36331 ஆகவும் இருந்தது.

கார் தயாரிப்பாளர்கள், கார்களுக்கு வேண்டிய உபரி பாகங்களைத் தயாரிப்பவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன் பாட்டையடுத்து இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கார்களுக்குத் தேவையான உபரி பாகங்களைத் தயாரிப்பவர்கள் இந்த பாகங்களின் விலையில் 10 சதவிகிதம் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

விற்பனையாளர்களின் கமிஷனும் கணிசமான அளவுக்குக் குறைக்கப்பட் டுள்ளது. 16 குதிரை வேக சக்தி வரையிலான கார்களுக்கு எக்ஸைஸ் தீர்வை 20 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்களுக்கு சப்ளை செய்யப்படும் டயர்கள், டியூப்புகள், பாட்டரிகள் முதலியவற்றிற்கு விற்பனை வரி விதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள் அடிப்படைச் செலவைக் கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளனர்.

சென்னை, மார்ச். 22 - ஆறு கோடியே எண்பது லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் கரை ஓரப்பகுதியில் ஏழை மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் பல அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டித்தர முடிவு செய்துள்ளது. வருகிற நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்காக அறுபது லட்சம் ரூபாய் செலவிடப்படும். இந்த திட்டத்தின் கீழ் உத்தேசமாக எட்டாயிரம் குடியிருப்புக்கள் கட்டித்தரப்படும். கால்வாயின் மத்தியப் பகுதியிலிருந்து 80 அடி தொலைவில் இருபுறமும் உள்ள குடிசைப் பகுதிகள் உடனடியாக அகற்றப்படும். இவர்களைக் குடி அமர்த்துவதற்காக மாற்று இடங்கள் 15 தேர்ந்தெடுக்கப்பட்டு குடியமர்த்தப்படுவார்கள். முதல் கட்ட வேலை தென் சென்னையில் துவக்கப்படும். பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரமாக அரசாங்க பொதுப் பணித்துறைக்கும் சென்னை மாநகராட்சிக்கும் சொந்தமாக உள்ள நிலங்களில் முதலாவதாக கட்டுமானப் பணி துவங்கும். இரண்டாவது கட்டமாக தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பின்னர் அங்கு கட்டிட வேலைகள் துவங்கும்.

மேற்கண்ட தகவலை தமிழ் நாடு வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியங்களின் தலைவரும் வீட்டு வசதித்துறை தனிச் செயலாளருமான கே.வி. ராமநாதன் நிருபரிடம் தெரிவித்தார். தமிழ் நாட்டில் புதிய நிர்வாகம் அமைந்த பிறகு குடிசை மாற்று வாரியப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற புகாரை அவர் மறுத்தார். மாறாக இப்போது அப்பணிகள் முறையாகவும் தீவிரமாகவும் நடைபெறுகிறது என்று ராமனாதன் கூறினார்.

Summary

Significant reduction in car prices - Ambassador - Rs. 32,170

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.