இந்திய வம்சாவளி குடும்பம் மரணம்: கொலை-தற்கொலை என சந்தேகம்

அமெரிக்காவின் நியூஜொ்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினா், இரு குழந்தைகளுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். 
இந்திய வம்சாவளி குடும்பம் மரணம்: கொலை-தற்கொலை என சந்தேகம்

கான்பூர்: அமெரிக்காவின் நியூஜொ்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினா், இரு குழந்தைகளுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். 

முதலில் இதை கொலை வழக்காக போலீஸாா் விசாரித்து வந்தனர். தற்போது, கொலை - தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

பலியானவர்கள் தேஜ் பிரதாப், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஓராய் பகுதியைச் சேர்ந்த விவேக் பிரதாப் சிங்கின் இளைய சகோதரர்தான் தேஜ் பிரதாப். 

அமெரிக்காவிலிருந்து இந்திய அரசுக்கு தேஜ் பிரதாப் குடும்பத்தினரின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டதும், மாநில அரசு சார்பில், விவேக் பிரதாப் சிங் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், மத்திய, மாநில  அரசுகளின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்துகொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹாா் (42) அவா்களின் 10 வயது மகன், 6 வயது மகள் ஆகியோா் அவா்களது வீட்டில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கொலை வழக்காக இதைப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இந்தச் சம்பவத்தால் பொது மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பிளெய்ன்ஸ்பரோ காவல் நிலைய போலீஸாா் முதலில் தெரிவித்திருந்தனர்.

தேஜ் பிரதாப் சிங்கும், சோனல் பரிஹாரும் தனியாா் நிறுவனங்களில் பொறியாளா்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு பிளைன்ஸ்போரோ பகுதியில் அவா்கள் சொந்த வீட்டை வாங்கி வசித்து வந்தனா் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களது உடல்கள் இந்தியா கொண்டு வர இன்னமும் 5 முதல் 7 நாள்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. உடல்கூறாய்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

நியூ ஜெர்ஸியிலிருந்து வெளியாகும் ஊடகங்களில், தேஜ் பிரதாப் தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், தேஜ் பிரதாப் இந்த துயர  முடிவெடுக்க என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com