
பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 பேர் காங்கிரஸில் சேரத் தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடக்கில் பிதார் நகரில் இருந்து தெற்கே சமராஜநகர் வரை பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 தலைவர்கள் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நான் ஒருபோதும் வெளியிட விரும்பவில்லை, ஆனால் இப்போது அதற்கான சூழ்நிலை வந்துவிட்டது. மாநிலத் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறோம்.
பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிகளைச் சேர்ந்த பலரும் காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இது எங்கள் தலைமைக்கும் நாட்டிற்கும் பயனுள்ளது.
அதுபோல ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 100 பேரும் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்' என்றார்.
டி.கே. சிவகுமாரின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.