எச்சரிக்கை: பணத்தைக் கொள்ளையடிக்கும் புதிய வைரஸ்! தவிர்ப்பது எப்படி?

ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் திருடி அதன்மூலம் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை கொள்ளையடுக்கும் வைரஸ்தான் கோல்டுடிக்கர்.
எச்சரிக்கை: பணத்தைக் கொள்ளையடிக்கும் புதிய வைரஸ்! தவிர்ப்பது எப்படி?
Published on
Updated on
1 min read


ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் திருடி அதன்மூலம் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை கொள்ளையடுக்கும் வைரஸ்தான் கோல்டுடிக்கர்.

தோற்றம், தரவுகள் என அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் இருக்கும் செயலிகளைப் போன்று இருக்கும் செயலிகளை (Apps) ட்ரோஜன் அல்லது வைரஸ் தாக்கும் (Malware) அபாயமுள்ள செயலிகள் எனலாம்.

இந்தவகை செயலிகள் மூலம் இணைய மோசடிகள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளது.

தற்போது கோல்டுடிக்கர் (GoldDigger) என்ற வைரஸ் செயலியால் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைய மோசடிகள் நடந்துள்ளது வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. 

குரூப் - ஐபி எனப்படும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு, இத்தகைய மோசடி நடப்பதைக் கண்டறிந்துள்ளது. இது இந்திய பயனர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த வைரஸ் மூலம் இணைய மோசடி அல்லது பயனர் வங்கிக்கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. செல்போனில் உள்ள வங்கிக்கணக்கு செயலிகளிலிருந்து தரவுகளை எடுப்பதன்மூலம் இது நடத்தப்படுகிறது. 

கோல்டுடிக்கர் ட்ரோஜன் செயலி

2023 ஜூன் முதல் கோல்டுடிக்கர் செயல்பாட்டில் உள்ளதாக இணைய பாதுகாப்புக் குழு தெரிவிக்கிறது. இது செல்போனில் உள்ள சாதாரண ஆன்ட்ராய்டு செயலிகளைப் போலவே இருக்கும். இதன் முதன்மை நோக்கம் பயனர்களின் வங்கிக்கணக்கு தரவுகளை எடுப்பதும், அதன்மூலம் பணத்தை கொள்ளையடிப்பதுதான் என இணைய பாதுகாப்புக் குழு எச்சரிக்கிறது.

வங்கிச் செயலி, வங்கிகளிலிருந்து வரும் குறுஞ்செய்தி போன்றவற்றை நகல் எடுப்பதன்மூலம் பண மோசடியை நிகழ்த்துகிறது. இந்த செயலி மூலம் தொலைதூரத்திலிருந்தும் (ரிமோட் கன்ட்ரோல்) செல்போனை பயனரின் அனுமதியின்றி இயக்க இயலும். பயனர் அனுமதியின்றி எந்த செயலியினுள்ளும் நுழைய இயலும்.

தற்காத்துக்கொள்வது எப்படி?

1. மேம்படுத்தப்பட்ட சமீபத்திய ஆன்ட்ராய்டு வகையை தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ள வேண்டும். (சில நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி புதிய ஆன்ட்ராய்டு வகையை அவ்வபோது அறிமுகம் செய்கின்றன)
 
2. அங்கீகரிக்கப்படாத தளத்திலிருந்து செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம். 

3. கூகுள் பிளே தளத்திலிருந்து வங்கி தொடர்புடைய செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வங்கி செயலிகளைப் போன்ற தோற்றத்தில் சில போலி செயலிகளும் இருக்கக்கூடும். அதனால், ரேட்டிங் அதிகமுள்ள செயலிகளை தரவிறக்கவும். 

4. தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி, தொடர்பு எண்கள் போன்றவற்றைப் பகிர வேண்டாம்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com