தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் ஹைதராபாத்தில் அவரது கட்சித் தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அதனை மீறியதற்காக ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, போத் தொகுதி எம்எல்ஏ ரத்தோட் பாபுரோவுக்கு வரவுள்ள தேர்தலில் பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சீட் தர மறுத்ததையடுத்து, அவர் இன்று காலை ரேவந்த் ரெட்டியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வாரத்தின் முதல் நாளில்.. தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!

தேர்தல் முன்னேற்பாடுகள்: அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

