காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இதையும் படிக்க: தங்கலான் டீசர் தயார்!

மேலும், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டதா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு நியமித்தது.

இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com