பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு: முதல்வர் பேச்சு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக தெலங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.
கே.சந்திரசேகர ராவ்
கே.சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தெலங்கானா பொருளாதாரம் பாதிப்பு அடைந்ததாக தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், “தேர்தலில் 95 முதல் 105 இடங்கள் வெற்றிபெறுவோம், காஜ்வெல் தொகுதி மக்கள் தன் மீது பேரன்பு வைத்துள்ளனர்” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கரோனா நோய்த் தொற்று ஆகியவை காரணமாக தெலங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இளம் மாநிலமான தெலங்கானா கடுமையான உழைப்பின் மூலம் பெரும் வளர்ச்சியை எட்டும்.

மேலும், தற்போது எட்டியுள்ள வளர்ச்சியால் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. வளர்ச்சியை நோக்கி செல்வது என்பது தொடர் செயல்முறையாகும் என்று தெரிவித்தார். 

2014-ஆம் ஆண்டு முதல் சந்திரசேகர ராவ் தெலங்கானாவின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com