
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு விஜயவாடாவில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தும்மலப்பள்ளி கலேஷேத்திரம் அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஹரிநாத் நுனேபல்லி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜெகதம் மற்றும் நியாபதி விஜய் ஆகியோர் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதிகள் ஆவார்.
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதல்வர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.