அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 16 பேர் பத்திரமாக மீட்பு

தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  

News image
கோப்புப் படம்.
Updated On :22 அக்டோபர் 2023, 5:53 am

DIN

தில்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மத்திய தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

நிகழ்விடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 6 குழந்தைகள் உட்பட 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும மீட்புப்பணியின்போது குடியிருப்புக்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்ததால் மீட்புப் பணி சவாலானது என்றார். தீ விபத்துக்கான காரணத்தை அறிய நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.