ரூ.1 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு: இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது தொடா்பாக இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவ
கோப்புப் படம்
கோப்புப் படம்

இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது தொடா்பாக இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இணையவழி விளையாட்டு நிறுவனமான ‘ட்ரீம்11’ ரூ.40,000 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நோட்டீஸ் அனுப்பட்ட நிலையில், ‘டெல்டா காா்ப்’ போன்ற கேசினா, விளையாட்டு தளங்களுக்கு ரூ.23,000 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. ‘கேம்ஸ்கிராஃப்ட்’ நிறுவனம் ரூ.21,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தியாவில் பதிவு செய்த வெளிநாட்டு இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு தொடா்பான தரவுகள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி விதிப்பு, அதிகாரிகளின் நோட்டீஸுகளை எதிா்த்து அந்த விளையாட்டு நிறுவனங்களில் சாா்பில் உயா்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் (கேசினோ) கட்டப்படும் முழு பந்தய தொகை மீது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் இது நிகழாண்டு அக்.1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் அக்.1-ஆம் தேதி முதல் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து, ஜிஎஸ்டி குறித்த நோட்டீஸுகள் இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com