தேர்தல் ஆணைய விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமனம்!

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமனம்!

5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு விளம்பர தூதரை நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

வாக்காளர்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கவும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வுக்கான விளம்பர தூதராக இந்திய தேர்தல் ஆணையம் அவ்வப்போது நியமிக்கும். 

இந்த நியமனங்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும். தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாளமாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர் கான், சமூக சேவகி நிருகுமார், பாடகர் ஜஸ்பீர் ஜசி ஆகியோர் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். 

இதேபோல தமிழ்நாட்டின் தேர்தல் விளம்பரத் தூதர்களாக பாடகி சித்ரா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வரிசையில் நடைபெற இருக்கிற 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு  உள்ளார். இவருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முன்னிலையில் நேற்று (அக்டோபர் 26) கையெழுத்தானது. 

ராஜீவ் குமார் ராவ் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான நியூட்டன் படத்தில் தேர்தல் அலுவலராக நடித்திருந்தார்.இப்படத்தில் சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் அவர் பணியாற்றுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்படம் அவருக்கு ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. இவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தல் ஆணையம் அவரை விளம்பர தூதராக நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com