ரூ.400 கோடி தர வேண்டும் என்று கேட்டு தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானியின் பெயரைக் குறிப்பிட்டு எங்கள் நிறுவனத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ரூ.20 கோடி தர வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதை நிறுவனம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், தொடா்ந்து சனிக்கிழமை மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ரூ.200 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த மிரட்டல் தொடா்பாக காவல் துறையில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்புக் குழுத் தலைவா் புகாா் அளித்தாா். மும்பை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, இணையவழிக் குற்றப் பிரிவு மூலம் மின்னஞ்சல் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்பது தொடா்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகா்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இது தொடா்பாக பிகாரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

கல்வி பெறும் உரிமையில் பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமை இடம்பெறாது: தில்லி உயா்நீதிமன்றம்

கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

