ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை: கமல் நாத்

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவர மாநிலங்களின் ஒப்புதலும் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை: கமல் நாத்

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவர மாநிலங்களின் ஒப்புதலும் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையைக் கொண்டவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து இன்று உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மட்டுமல்ல, மாநிலங்களின் ஒப்புதலும் தேவை. ஹரியாணா, மகாராஷ்டிரம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வேண்டுமானால் அமைச்சரவைக்கு முன்மொழிவை அனுப்பி அந்தந்த சட்டப்பேரவைகளைக் கலைக்கலாம். சட்டப்பேரவையின் காலத்தைக் குறைக்க முடியாது. அதுபோல நடக்காது' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com