எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் குழுவில் மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் குழுவின் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர் குழுவில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 12:26 pm

DIN

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் குழுவின் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர் குழுவில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார்.

காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சிவசேனை (யுபிடி) தலைவர் சஞ்சய் ரௌத், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 26 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.

இந்நிலையில், அக்கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட 28 கட்சிகளைச் சோ்ந்த 63 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்பட 14 போ் இடம்பெற்றுள்ளனர். 

கூட்டணியின் அடுத்த கூட்டத்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது தொடா்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.