நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை(செப். 5) ஆலோசனை

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 6:33 am

DIN

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார். 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்பொருட்டு மத்திய அரசு இந்த சிறப்புக் கூட்டத்தொடரை அறிவித்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. 

இந்நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி நாளை(செவ்வாய்கிழமை) ஆலோசனை மேற்கொள்கிறார்.

சிறப்புக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்களின் பிரச்னைகள் என்ன? மத்திய அரசு முக்கிய மசோதாக்களை கொண்டுவந்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. 

இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களின் கூட்டமும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை(செப். 5) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.