செப்.13ல் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 
செப்.13ல் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளதாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 28 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் 3 ஆவது கூட்டம் கடந்த செப். 1 ஆம் தேதி மும்பையிலும் நடைபெற்றது.

காங்கிரஸ், திமுக, திரிணமூல், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிா்க்கட்சிகள் இதில் கலந்துகொண்டன. இதில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை வரும் செப். 30-ஆம் தேதிக்குள் இறுதி செய்வது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு இறுதி செய்யப்பட்டுள்ளது. குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானா்ஜி, சிவசேனையின் சஞ்சய் ரெளத், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மியின் ராகவ் சதா, சமாஜவாதி கட்சி மூத்த தலைவா் ஜாவத் அலி கான், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லலன் சிங், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மேலும் ஒருவர் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளதாக சிவசேனை(உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். தில்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com