திருப்பதியில் 5-வது சிறுத்தை சிக்கியது!

திருப்பதி அலிபிரி - திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5-ஆவது சிறுத்தை வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

திருப்பதி அலிபிரி - திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5-ஆவது சிறுத்தை வியாழக்கிழமை காலை, கூண்டில் சிக்கியது. 

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினர், திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர், சடலமாக அந்த சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ரூ. 5 லட்சமும், ஆந்திர வனத் துறையிலிருந்து ரூ. 5 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இந்த நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. 

ஏற்கெனவே கடந்த இரு மாதங்களில் 4 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் 5 ஆவது சிறுத்தை வியாழக்கிழமை காலை கூண்டில் சிக்கியது. நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் 7 ஆவது மைல் பகுதி இடையே சிறுத்தை பிடிபட்டதாகவும் அது ஆண் சிறுத்தை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மொத்தம் 5 சிறுத்தைகளின் ஒரு சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில் 4 சிறுத்தைகள் எஸ்.வி. உயிரியல் பூங்காவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com