பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு

என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை என்று கூறியிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கிறார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:51 am

DIN

என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை என்று கூறியிருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது, சந்திரபாபு நாயுடு கூறுகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

ஆந்திர முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் , ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

நந்தியாலா பகுதியில் இருந்து, சந்திரபாபுவை, சிஐடி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஜெர்மனியில் உள்ள சீமென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.371 கோடி ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில்  சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சிஐடி காவல்துறையினருடன் இணைந்து அமலாக்கத் துறையினரும் விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.