சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது ஏன்?

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கைது செய்தது ஆந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது
சந்திரபாபு நாயுடு கைது

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறையினர் கைது செய்தது ஆந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரத்தில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,350 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக  ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ 240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ரசீது மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனிடையே, ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடியில் புகார் அளித்தார்.  இதனையடுத்து திறன் மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் இயக்குனர் உட்பட பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாநில அரசின் சார்பில் ஜூலை 2021 இல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.  இந்த சிஐடி அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததா என்ற விசாரணையில் கவனம் செலுத்தியது.

இந்த வழக்கில், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் நிர்வாகி காந்தா சுப்பாராவ், இயக்குநர் கே.லட்சுமிநாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏனெனில் லட்சுமிநாராயணா  சந்திரபாபுவிடம் சிறப்பு அதிகாரியாக  பணியாற்றியவர். ஓய்வுக்குப் பிறகு, லட்சுமிநாராயணா ஆந்திர அரசின் ஆலோசகராகப் பணியாற்றினார். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் இயக்குநராகவும் பணியாற்றினார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மையங்களில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் லட்சுமிநாராயணன் வீட்டிலும் சிஐடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த திறன் மேம்பாட்டு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையில் முக்கிய புள்ளிகளை சிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜூன் 2015 இல், திறன் மேம்பாட்டுக் கழகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் கண்டறிந்தது. அரசானை எண் 4 இன் படி, சீமென்ஸ் எம்.டி. சௌம்யாத்ரி சேகர் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்.டி. விகாஸ் கன்வில்கர் ஆகியோருக்கு சந்திரபாபு அரசால் ரூ.241 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணம் 7 ஷெல் நிறுவனங்களுக்கு தவறான விலைப்பட்டியல் மூலம் நிதி மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

மேலும், இந்தத் திட்டத்துக்கான செலவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஐ.டி. 2017-18ல் ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஐடி ரிமாண்ட் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com