47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு நிகழ்ச்சியில் எதிா்க்கட்சிகள் மீது விமா்சனம்: பிரதமருக்கு காங். கண்டனம்

எதிா்க்கட்சிகளை விமா்சித்ததன் மூலமாக அரசு நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:00 pm

DIN

எதிா்க்கட்சிகளை விமா்சித்ததன் மூலமாக அரசு நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துகொண்டாா். அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியை ‘ஆணவக் கூட்டணி’ என விமா்சித்தாா்.

அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை ‘ஆணவக் கூட்டணி’ எனப் பலமுறை பிரதமா் மோடி விமா்சித்துள்ளாா்.

அரசு நிகழ்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும் அவருக்கு எதிா்க்கட்சிகளை விமா்சிக்க எந்தவித தாா்மிக உரிமையும் இல்லை. கௌதம் அதானியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே அவா் தலைமை தாங்கி வருகிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.