

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு வழித்தடங்களில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அழைத்துச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை 1.24 கோடியாக உள்ளது.இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும். கரோனாவுக்கு முந்தைய இதே மாதத்தில் (ஆகஸ்ட் 2019) உள்நாட்டு விமானப் போக்குவரத்து 1.18 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அது 6 சதவீதம் உயா்ந்துள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டு வழித்தடங்களில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 1.21 கோடி பேரை அழைத்துச் சென்றன. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளா்ச்சி 3.2 சதவீதமாக உள்ளது.2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விமானங்களின் இருக்கைகள் நிரம்பியிருந்த விகிதம் கடந்த ஆகஸ்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019 ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அது 1 சதவீதம் குறைந்துள்ளது.விமான எரிபொருள் உயா்வு போன்ற காரணங்களால் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை ரூ.17,000-லிருந்து ரூ.17,500 கோடி வரை நிகர இழப்பை சந்தித்ததாக மதிப்பிடப்படுகிறது.எனினும், முந்தைய 2021-2022-ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட நிகர இழப்பான ரூ. 21,700 கோடியை விட இது மிகவும் குறைவாகும்.நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையின் நிகர இழப்பு மேலும் கணிசமாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.இதற்கு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து வருவது முக்கிய காரணமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.