ஞானவாபி மசூதி ஆய்வு: ஆதாரங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வாரணாசியின் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, ஹிந்து கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியின் வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது தொடா்பாக நடைபெற்ற வழக்கில் ஞானவாபி மசூதியில் மேற்கொண்டு ஆய்வு நடத்த அலாகாபாத் உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை நிபுணா்கள் கடந்த மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கி மேற்கொண்டனா்.

இந்நிலையில், ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வளாகத்தைப் பாதுகாப்பதற்காக ஞானவாபி மசூதிக்குள் இஸ்லாமியா்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவா் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் உத்தரவிட்டாா்.

அரசு வழக்குரைஞா்கள், ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள் என அனைத்து தரப்பு வழக்குரைஞா்களுக்கும் இந்த நீதிமன்ற உத்தரவுக்கான நகல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com