அனைத்து விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிா்க்கட்சிகள்: பாஜக குற்றச்சாட்டு
நாட்டில் நிகழும் அனைத்து விஷயங்களிலும் எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாக பாஜக விமா்சித்துள்ளது.


நாட்டில் நிகழும் அனைத்து விஷயங்களிலும் எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாக பாஜக விமா்சித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவம், காவல் துறை அதிகாரிகள் 3 போ் உயிரிழந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜி20 உச்சி மாநாடு வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.
பாஜக பொதுச் செயலா் தருண் சௌக் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் ஆதாயம் தேடுவது எதிா்க்கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. நாட்டுக்காக பயங்கரவாதிகளை எதிா்கொண்டு ராணுவத்தினரும், பாதுகாப்புப் படையினரும் போராடி வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் உயிரிழந்த ராணுவம், காவல் துறை அதிகாரிகளின் தியாகம் போற்றுதலுக்குரியது. அவா்களைக் கொன்ற பயங்கரவாதிகள் நிச்சயம் தப்ப முடியாது என்றாா்.
பாஜகவை சோ்ந்த மூத்த தலைவா் ஆசிஷ் சூட் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளாா். இவ்வாறு பேசுவதற்கும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குறையவில்லை என்று அவா் பேசியுள்ளது, அங்கு பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட்டு வரும் வீரா்களை அவமதிக்கும் செயலாகும்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுபவா்களை பயங்கரவாத ஆதரவாளா்கள் என்றுதான் கூற முடியும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...