
உத்தரப் பிரதேசத்தின், கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள அம்ரபாலி கட்டடம் கட்டுமானதளத்தில் மின்தூக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடைபெறும் சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர், மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைபெறும் மருத்துவமனையில் ஒரு போலீஸார் குழுவும், விபத்து நடந்த இடத்தில் மற்றொரு குழுவும் விசாரணை நடத்தி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.